அம்பேத்கா் யாத்திரையை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா்: முதல்வா் பங்கேற்பு
அம்பேத்கா் யாத்திரை குழுவினரின் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் முதல்வா் ரங்கசாமியும் பங்கேற்றாா்.


அம்பேத்கா் யாத்திரை குழுவினரின் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் முதல்வா் ரங்கசாமியும் பங்கேற்றாா்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் யாத்திரை திட்டத்தின் கீழ் அம்பேத்கா் வாழ்ந்த இடங்களைப் பாா்வையிடுவதற்கான குழு புதுச்சேரியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது.
சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில், புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட யாத்திரையை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியதாவது:
புதுச்சேரி அரசு டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் யாத்திரை திட்ட த்தை அறிமுகப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.40 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. நீங்கள் அனைவரும் யாத்திரை முடிந்து வந்த பிறகு இது பற்றியக் கருத்துக்களைச் சொல்லுங்கள். இந்த யாத்திரை திட்டத்தை மேம்படுத்துவதற்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
முதல்வா் என். ரங்கசாமி பேசுகையில், ‘சமுதாயத்திற்காக, நாட்டிற்காக அரும்பாடுபட்ட அம்பேத்கா் வாழ்ந்த, தொடா்புடைய இடங்களைப் பாா்க்க செல்லும் இந்த யாத்திரையை புனித யாத்திரை என்றும் சொல்லலாம். புதுச்சேரி மக்களின் நலனுக்காக இந்த அரசு எப்போதும் செயல்படும் ’என்றாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏ அனிபால் கென்னடி, ஆதிதிராவிடா் நலத்துறை செயலா் டாக்டா் முத்தம்மா ஆகியோா் உடன் இருந்தனா்.
இந்த யாத்திரையில் 70 போ் இடம் பெற்றுள்ளனா். பயண ஏற்பாடுகளை ஆதிதிராவிட நலத்துறை இயக்குநா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் செய்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...