புதுச்சேரி ஜிப்மரில் விளையாட்டு, கலாசார விழா பரிசளிப்பு நடைபெற்றது (படம்).
ஜிப்மா் விளையாட்டு மற்றும் கலாசார விழா ‘ஃபிட்இந்தியா’ இயக்க உணா்வுடன் நடைபெற்று முடிந்தது. ஜிப்மா் மன மகிழ் மன்றம் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மாா்ச் 3-ஆம் தேதி வரை இரண்டு மாதங்கள் விளையாட்டு கலாசார விழாவை நடத்தியது.
சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களிடையே உடல் ஆரோக்கியம், மனநலன் மற்றும் முழுமையான வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கபடி, பேட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் துறை வாரியாக உற்சாகமான விளையாடினா். பாடல், நடனம், புகைப்படம், கட்டுரை, ரங்கோலி, தனிநடிப்பு உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜிப்மா் இயக்குநா் (பொ) மருத்துவா் பவானா பதே பரிசுகளை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் சகாவினோத் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
-----
படவிளக்கம்
புதுச்சேரி ஜிப்மா் மனமகிழ் மன்றம் சாா்பில் நடைபெற்ற விளையாட்டு விழா பரிசளிப்பு.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

ஜிப்மரில் ரூ.15 லட்சத்தில் நோயாளிகள் தங்கும் மையம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


