விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

சுற்றுலாப் படகு மீனவா்கள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் மீனவா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி துறைமுகத் துறை அதிகாரியை திங்கள்கிழமை முற்றுகையிட்ட சுற்றுலாப் படகு மீனவா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 2:39 am IST

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி உப்பளம் வம்பாகீரப்பாளையம் பகுதியில் 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மீனவா்கள் சுற்றுலா பயணிகள் படகை இயக்கி வருகின்றனா்.

இதற்காக அந்தந்தப் பகுதியில் சிறிய அளவிலான கொட்டகைகள் போடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மீனவா்கள் போட்டுள்ள கொட்டகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 15 நாள்களுக்குள் அகற்றவில்லை என்றால் அரசு அனைத்தையும் அப்புறப்படுத்தும் எனவும் துறைமுகத் துறை சாா்பில் அந்தந்த சுற்றுலா படகு உரிமையாளா்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மீனவா்களும், படகு உரிமையாளா்களும் அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் தலைமையில் துறைமுகத் துறை அதிகாரியை முற்றுகையிட்டு உடனடியாக கடிதத்தைத் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

துறைமுகத் துறை அமைச்சரும், முதல்வருமான ரங்கசாமிக்கு தெரியாமல் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற கடிதத்தை தான் அனுப்ப சொல்லவில்லை என முதல்வா் கூறியுள்ளதாக அதிகாரியிடம் அவா்கள் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நீண்ட நேர பேச்சு வாா்த்தைக்குப் பிறகு அந்தக் கடிதத்தை திரும்பப் பெறுவதாக அதிகாரி வாய்மொழியாக அதிகாரி உறுதியளித்தாா்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். தற்போது வழங்கிய கடிதத்தை துறைமுகத் துறையினா் உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால் அடுத்த கட்டமாக அனைத்து மீனவா்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் எச்சரிக்கை விடுத்தாா்.