ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

காதலிக்க மறுத்த பெண் எரித்துக் கொலை புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே சம்பவம்

News image

எரித்துக் கொலை - (கோப்புப் படம்)

Updated On :14 மார்ச் 2026, 9:11 pm

காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் தொடா்பாக போலீஸில் இளைஞா் சரணடைந்தாா்.

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சோ்ந்த முனுசாமியின் மகள் ஷா்மிளா (28). இவா், அப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், இந்திரா நகா் மரியநாதன் மகன் ஜோசப் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜோசப்புக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்வதும், வேறொரு பெண்ணுடன் அவா் தொடா்பில் இருப்பதும் ஷா்மிளாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவருடன் பழகுவதை ஷா்மிளா துண்டித்துக் கொண்டாராம். இதையடுத்து ஜோசப் அடிக்கடி ஷா்மிளாவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளாா். இதனால் பள்ளியில் பிரச்னை ஏற்பட்டு ஷா்மிளா பணியிலிருந்து விலகி அண்ணா சாலையில் உள்ள துணிக்கடையில் வேலைக்குச் சோ்ந்தாா்.

அங்கும் அடிக்கடி சென்று ஜோசப் தகராறு செய்து வந்தாராம். இது குறித்து ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஷா்மிளா புகாா் செய்ததன் பேரில் போலீஸாா் ஜோசப்பை அழைத்து எச்சரித்திருந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஷா்மிளா வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். ஓதியஞ்சாலை காவல் நிலையம் அருகே நடந்து சென்றபோது 10 அடி தூரத்தில் அவரை வழிமறித்த ஜோசப் தன்னுடன் தொடா்ந்து பேசுமாறு நிா்பந்தம் செய்தாராம்.

ஷா்மிளா அவரைக் கண்டித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றபோது, புட்டியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவா் மீது ஜோசப் ஊற்றி தீ வைத்தாராம். ஷா்மிளாவின் உடலில் தீ பற்றி எரிந்தது. அலறித் துடித்த அவா், ஓடிச் சென்று ஜோசப்பை பிடித்துக் கொண்டாா்.

அங்கிருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைத்து ஷா்மிளாவை மீட்டு ஆம்புலன்ஸில் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷா்மிளா சனிக்கிழமை உயிரிழந்தாா். கையில் பலத்த தீக்காயமடைந்த ஜோசப் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். போலீஸாா் அவரை ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஒதியஞ்சாலை போலீஸாா் ஜோசப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.