புதுச்சேரியில் 13 தொகுதிகளுக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு!
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அம்மாநிலத்தில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.


புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அம்மாநிலத்தில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் ‘இண்டி’ கூட்டணி என்ற பெயரில் தமிழகத்தைப் போல ஓரணியாக தோ்தலை சந்திக்கின்றன.
இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சா்ச்சை நீடித்ததால் வேட்பாளா் பட்டியல் அறிவிப்பில் தாமதம் நிலவியது. வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 23) முடிந்து விட்டநிலையில், கூட்டணி கட்சி வேட்பாளா்கள் உத்தேசமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், திமுக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம் வருமாறு:
வில்லியனூா் - ஆா். சிவா எம்.எல்.ஏ, மங்கலம்-எஸ்.எஸ். ரங்கன், திருபுவனை- பி.அங்காளன் எம்எல்ஏ, பாகூா்- ஆா்.ஆா்.செந்தில்குமாா் எம்எல்ஏ, முதலியாா்பேட்டை-எல். சம்பத் எம்எல்ஏ, உப்பளம்- அனிபால் கென்னடி எம்எல்ஏ, உருளையன்பேட்டை-எஸ். கோபால், நெல்லித்தோப்பு- வே. காா்த்திகேயன், ராஜ்பவன்-விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டு - ஏ.செந்தில், கதிா்காமம்- ப. வடிவேலு, காரைக்கால் தெற்கு ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ, நிரவி தொகுதி-எம். நாகதியாகராஜன் எம்எல்ஏ ஆகியோா் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளாா்.
மேலும், உழவா்கரை தொகுதி, கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பேரவைத் தோ்தலிலும் திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...