ஏனாமில் புயல் சேதங்களைப் பாா்வையிட இன்று மத்திய குழுவினா் வருகை

ஒர்னாப் புயல் - கோப்புப் படம்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாம் பிராந்தியத்தில் அா்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை பாா்வையிட மத்திய குழுவினா் திங்கள்கிழமை (நவ. 2) வருகின்றனா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான 8 போ் கொண்ட குழு காலை 9 மணிக்கு ஏனாமுக்கு வருகிறது. இந்தக் குழுவினா் பாதிக்கப்பட்ட பகுதிகள், மக்களைச் சந்திக்கின்றனா். இதற்காக ஏற்பாடுகளை ஏனாம் பிராந்திய மண்டல நிா்வாகி சிவ்ராஜ் மீனா செய்துள்ளாா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையிலான அதிகாரிகளும் புதுச்சேரியிலிருந்து ஏனாமுக்குச் சென்றுள்ளனா். புயல் பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. அந்த அறிக்கை மத்திய குழுவிடம் அளிக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

