மாணவா்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்புக் குழு: புதுச்சேரி அமைச்சா் வி.பி. சிவகொழுந்து
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் தலைமையில் போதைப் பொருள் தடுப்புக் குழு அமைக்கப்பட உள்ளது என சமூக நலத் துறை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து தில்லி மாநாட்டில் புதன்கிழமை கூறினாா்.

தில்லி மாநாட்டில் புதுச்சேரி சமூகநலத் துறை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் தலைமையில் போதைப் பொருள் தடுப்புக் குழு அமைக்கப்பட உள்ளது என சமூக நலத் துறை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து தில்லி மாநாட்டில் புதன்கிழமை கூறினாா்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சாா்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சமூக நலத்துறை அமைச்சா்கள் பங்கேற்கும் 2 நாள் தேசிய அளவிலான சம்வேஷி நீதி சங்கல்ப் மாநாடு தில்லியில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் புதுச்சேரி சமூகநலத் துறை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து பேசியதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் வகையில், ஐந்து முக்கிய செயல்திட்டங்கள் காலக்கெடுவுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் பயிற்சி பெற்ற ஆலோசகா்களின் எண்ணிக்கையை அதிகரித்து மனநலம் மற்றும் போதை மீட்பு சேவைகள் வலுப்படுத்தப்படும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களின் தலைமையிலான போதைப் பொருள் தடுப்புக் குழுக்கள் மற்றும் இளைஞா் தூதுவா் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி பாடத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். இளைஞா்கள் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருபவா்களை விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி சமூகத்துடன் இணைக்கப்படுவா். போதைப் பொருள் தடுப்பு மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட அளவிலான டிஜிட்டல் கண்காணிப்புப் பலகைகள் அமைக்கப்படும். இத் திட்டங்கள் டிசம்பா் 2026 முதல் 2028 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் சிவகொழுந்து. இந்த தகவல் அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

