சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி பிரதேச தையல் கலைஞா்கள், தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த சிஐடியு தையல் கலைஞா்கள், தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :

புதுச்சேரி பிரதேச தையல் கலைஞா்கள், தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை அருகேயுள்ள சமூகப் பாதுகாப்பு வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் நிா்வாகிகள் மணிபாலன், ரேவதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தீபாவளி உதவித் தொகையை ரூ.7 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். தையல் தொழிலாளா்கள் அனைவரையும் உடனடியாகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத் தலைவா் டி. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.