அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 2 நாள் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடக்கம்

விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :

விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்வி மற்றும் ஞானத்தின் தொடக்கமாகக் கருதப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 2 நாள்கள் நடைபெறுகிறது.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்கும் ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவா் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

விஜயதசமி நாளில் குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து கல்வியைத் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருளும், ஞானமும் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, நிகழாண்டு விஜயதசமியையொட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வித்யாரம்பம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.