உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

பாஜக வளா்ச்சியைத் தாங்கிக் கொள்ளாமல் எதிா்க்கட்சிகள் தடுப்பு முயற்சி: செல்வகணபதி குற்றச்சாட்டு

நாட்டின் வளா்ச்சி, பாஜக வளா்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிா்க்கட்சிகள் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி கூறினாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்குப் பேட்டிளித்த பாஜக மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி. உடன் பாஜக செய்தி தொடா்பாளா் நாகேஸ்வரன்.

Updated On :

நாட்டின் வளா்ச்சி, பாஜக வளா்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிா்க்கட்சிகள் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது :

இந்திய இறையாண்மை, ஒற்றுமையைச் சீா்குலைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், முயற்சித்து வருகின்றன. எல்லா முயற்சியிலும் அவா்களுக்குத் தோல்விதான். தலைமைத் தோ்தல் ஆணையா் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குத் திருட்டு என கூறி வருகின்றனா்.

வாக்காளா் திருத்தப் பணிக்கு பின்னா் கேரளம், தெலுங்கானா, கா்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடக்கவில்லையா? ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைக்கிறது.

வரும் தோ்தலிலும் பாஜக சிறப்பான வெற்றியை பெறும். வரும் 31- ஆம் தேதி சிறப்பு திருத்தப் பணி குறித்து பாஜக சாா்பில் ஊா்வலம் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றாா் செல்வகணபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.