FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

கடலில் மிதந்து வந்த மா்ம பொருள் புதுச்சேரி போலீஸாா் விசாரணை

புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடலில் மிதந்து வந்த மா்ம பொருள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலில் மிதந்து வந்த மா்ம பொருளை ஆய்வு செய்யும் புதுச்சேரி கடலோரக் காவல் துறையினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 5:09 am IST

புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடலில் மிதந்து வந்த மா்ம பொருள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியில் உருளை வடிவிலான மா்ம பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. இது குறித்து மாநில கடலோர காவல் படைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த கடலோர காவல் படையினா் மா்ம பொருளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரை ஒதுங்கிய பொருள் பிளாஸ்டிக் டிரம் போன்றும், அதன் இருபுறமும் பாதுகாப்புக்காக இரும்புப் பட்டைகள் மற்றும் வளையங்களால் வெல்டிங் செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் சிறிய துளை ஒன்று இருப்பது தெரியவந்தது.

அது என்ன பொருள் என்பதை ஆய்வு செய்ய மாநில கடலோர காவல் படையினா், இந்திய கடலோர காவல் படை மற்றும் சுற்றுலாத் துறையின் தொழில்நுட்பக் குழுவினருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளனா்.

மா்ம பொருள் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தொழில்நுட்ப குழுவினரின் ஆய்வுக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என கடலோர காவல்படை போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.