இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

அரசு தொழிற்பயிற்சி கல்லூரிக்கு இடம் தேர்வு

திண்டிவனத்தில் புதிதாக அரசு  தொழிற்பயிற்சி கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

திண்டிவனத்தில் புதிதாக அரசு  தொழிற்பயிற்சி கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 தமிழக முதல்வர் ஜெயலலிதா திண்டிவனத்தில் புதிதாக தொழிற்பயிற்சிக் கல்லூரி இந்த கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். இக்கல்லூரி தாற்காலிகமாக திண்டிவனம் நகர எல்லைக்குள் அடுத்த 10 நாள்களில் செயல்பட உள்ளது. இதற்காக சந்தைமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தான இடம் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது.

 மேலும், நிரந்தரமாக கல்லூரிக் கட்டடம் அமைக்க சந்தைமேடு பகுதியில் புறவழிச்சாலை அருகே அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில், தொழிற்பயிற்சி கல்லூரிகளின் திருச்சி மண்டல இணை இயக்குநர் டான்பாஸ்கோ, திண்டிவனம் தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவகாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

 நகர்மன்ற உறுப்பினர்கள் பாலச்சந்திரன், சாரதாம்பாள் ஐயப்பன், தொழிற்பயிற்சி அலுவலர் நாகரத்தினம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.