ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தொகுதி அலசல்:விழுப்புரம் தொகு​தியை தக்க வைக்​குமா அதி​முக?

ஒருங்​கி​ணைந்த தென்​னாற்​காடு மாவட்​ட​மாக இருந்த போது,​​ 1952-இல் உரு​வான பழம்​பெ​ரும் தொகுதி விழுப்​பு​ரம்.​

Updated On :4 மே 2016, 10:38 pm

ஒருங்​கி​ணைந்த தென்​னாற்​காடு மாவட்​ட​மாக இருந்த போது,​​ 1952-இல் உரு​வான பழம்​பெ​ரும் தொகுதி விழுப்​பு​ரம்.​

ரயில்,​​ பேருந்து போக்​கு​வ​ரத்தை மைய​மாக வைத்து ஓர​ளவு வளர்ச்​சி​ய​டைந்த நக​ரம் என்​ப​தைத் தவிர,​​ வேறொன்​றும் தொகு​தி​யில் இல்லை.​

1952-முதல் தேர்த​லில் நாக​ரா​ஜன் சுயேச்​சை​யாக வென்​றார்.​ 1957-இல் காங்​கி​ரûஸ ​ சேர்ந்த சாரங்​க​பாணி வெற்றி பெற்​றார்.​ இதன் பின்​னர்,​​ 1962-இல் திமு​க​வைச் சேர்ந்த சண்​முக உடை​யார் வெற்றி பெற்று தொகு​தியை திமுக வச​மாக்​கி​னார்.​

தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற அவர்,​​ 1977-இல் எம்​ஜி​ஆர் அதி​முக தொடங்​கிய முதல் தேர்த​லில்,​​ அதி​மு​க​வைச் சேர்ந்த கிருஷ்​ண​னி​டம் தோல்​வி​ய​டைந்​தார்.​

மீண்​டும் 1980-இல் திமு​க​வைச் சேர்ந்த கு.ப.பழ​னி​யப்​ப​னும்,​​ 1984-இல்,​​ அதி​மு​க​வைச் சேர்ந்த வள​வ​னூர் மணி​யும் வெற்றி பெற்​ற​தால்,​​ திமுக-​அதி​முக என்ற நிலை தொடர்ந்து வந்​தது.​

இதன் பிறகு திருக்​கோ​வி​லூர் பகு​தி​யைச் சேர்ந்த கல்​லூ​ரிப் பேரா​சி​ரி​யர் பொன்​முடி 1989-இல் வெற்றி பெற்​றார்.​ அடுத்து நடந்த 1991 தேர்த​லில்,​​ கட​லூ​ரைச் சேர்ந்த அதி​முக ஜனார்​த​னன்,​​ பொன்​மு​டியை வீழ்த்​தி​னார்.​

இதன் பிறகு 1996,​ 2001,​ 2006 தேர்​தல்​க​ளில் தொடர்ந்து வெற்றி பெற்று,​​ பொன்​முடி இத்​தொ​கு​தியை திமுக கோட்​டை​யாக மாற்​றி​னார்.​ இவரை வீழ்த்த வேண்​டும் என்​ப​தற்​கா​கவே,​​ திண்​டி​வ​னத்​தில் வெற்றி பெற்று வந்த சி.வி.சண்​மு​கத்தை,​​ கடந்த 2011 தேர்த​லில் அதி​முக விழுப்​பு​ரத்​தில் கள​மி​றக்​கி​யது.​

திட்​ட​மிட்​ட​ப​டியே,​​ 90 ஆயி​ரத்து 304 வாக்​கு​கள் பெற்று சி.வி.சண்​மு​கம் வெற்றி பெற்​றார்.​ 78 ஆயி​ரத்து 207 வாக்​கு​கள் பெற்று பொன்​முடி தோல்​வி​ய​டைந்​தார்.​ தொடர்ந்து தொகு​தி​யில் அதி​முக வளர்ச்சி பெற்​ற​தோடு,​​ உள்​ளாட்​சி​க​ளி​லும் பெரும்​பான்மை பெற்று தக்​க​வைத்​துள்​ளது.​

இந்​நி​லை​யில்,​​ இந்​தத் தேர்த​லில் பொன்​முடி திருக்​கோ​வி​லூர் தொகு​திக்கு மாறி​யுள்​ளார்.​ இத​னால்,​​ விழுப்​பு​ரம் தொகு​தியை திமுக தனது கூட்​ட​ணிக்கு தாரை​வார்த்​துள்​ளது.​

​களம் காணும் வேட்​பா​ளர்​கள்:​​ அதி​முக சார்​பில் தற்​போ​தைய எம்​எல்​ஏ​வான சி.வி.சண்​மு​கம்,​​ திமுக கூட்​ட​ணி​யில் இந்​திய யூனி​யன் முஸ்​லிம் லீக் மாவட்ட செய​லர் அமீர்​அப்​பாஸ்,​​ பாமக சார்​பில் மாவட்ட செய​லர் பா.பழ​னி​வேல்,​​ தேமு​திக சார்​பில் எம்​எல்ஏ வெங்​க​டே​சன்,​​ பாஜக சார்​பில் ராம.ஜெயக்​கு​மார்,​​ பகு​ஜன் சமாஜ் கட்சி சார்​பில் கலி​ய​மூர்த்தி,​​ நாம் தமி​ழர் கட்சி சுப்​ர​மணி உள்​ளிட்​டோர் போட்​டி​யி​டு​கின்​ற​னர்.​

அதி​முக:​​ அதி​முக செல்​வாக்கு மிகுந்த தொகுதி,​​ திமு​க​வைச் சேர்ந்த பொன்​முடி தொகுதி மாறி​யது,​​ தொகுதி கைவிட்​டுப் போன​தால் ஏற்​பட்ட திமு​க​வி​ன​ரின் அதி​ருப்தி போன்​றவை சி.வி.சண்​மு​கத்​துக்கு பல​மாக அமைந்​துள்​ளன.​

தொகு​தி​யில் பிரச்​னை​கள் ஏது​மின்றி அமை​தியை விரும்​பிச் செல்​லும் இவ​ரது குண​மும் கூடு​தல் பலம்.​ வன்​னி​யர் உள்​ளிட்ட அனைத்து தரப்​பி​ன​ரின் ஆத​ர​வும் கிடைக்​கும்.​ ​

கடந்த முறை​யைப் போல்,​​ வாய் திறக்​கா​மல் மௌ​ன​மாக சென்று பிர​சா​ரம் செய்தே சாதிக்க முடி​யும் என்று நம்​பு​கி​றார் சண்​மு​கம்.​ அத​னையே இப்​போ​தும் பின்​பற்றி வரு​கி​றார்.​

வெற்றி பெற்று கடந்த 5 ஆண்​டு​க​ளில் நன்றி சொல்ல வரா​தது,​​ பெரிய திட்​டங்​கள் எதை​யும் கொண்டு வரா​தது,​​ கட்​சி​யில் பதவி பறிப்பு,​​ அவ​ரது சகோ​த​ர​ரின் ஆதிக்​கம்,​​ கட்​சி​யில் உள்ள கோஷ்​டி​கள் ஆகி​யவை சி.வி.சண்​மு​கத்​துக்கு பல​வீ​ன​மாக அமைந்​துள்​ளது.​

பாமக:​​ பெரும்​பான்​மை​யாக வன்​னி​யர்​கள் உள்ள தொகுதி என்​ப​தா​லும்,​​ இம்​முறை தனித்து போட்​டி​யி​டு​வ​தா​லும் பாமக கணி​ச​மான வாக்​கு​களை,​​ இத்​தொ​கு​தி​யில் கைப்​பற்​றும் விதத்​தில் பணி​யாற்றி வரு​கி​றது.​

ஆனால்,​​ அதி​மு​க​வைச் சேர்ந்த சி.வி.சண்​மு​க​மும் வன்​னி​யர் என்​ப​தால்,​​ பாம​க​வி​ன​ரின் வாக்கு வங்கி சித​றும் வாய்ப்​புள்​ளது.​

ராம​தா​ஸின் சொந்த மாவட்​டம்,​​ அன்​பு​ம​ணி​யின் தொலை நோக்​குத் திட்​டங்​கள்,​​ நன்கு அறி​மு​க​மான வேட்​பா​ளர் போன்​றவை பாமக பழ​னி​வே​லுக்கு கூடு​தல் பலம் சேர்க்​கும்.​ பிற சமூ​கத்​தி​ன​ரின் ஆத​ர​வைப் பெறு​வ​தில் பல​வீ​னம் உள்​ளது.​

இந்​திய யூனி​யன் முஸ்​லிம் லீக்:​​ இத்​தொ​கு​தி​யில் இந்​திய யூனி​யன் முஸ்​லிம் லீக் முதல் முறை​யாக தேர்​தல் களம் காண்​கி​றது.​ 30 ஆயி​ரம் முஸ்​லிம் சமு​தாய மக்​க​ளின் நிலை​யான வாக்கு வங்​கி​யும்,​​ திமு​க​வின் வாக்​கு​க​ளை​யும்,​​ பொன்​மு​டி​யின் சாத​னை​க​ளை​யும் நம்பி,​​ அக்​கட்சி வேட்​பா​ளர் அமீர் அப்​பாஸ் நம்​பிக்​கை​யு​டன் களத்​தில் உள்​ளார்.​

ஆனால்,​​ உள்​ளூர் திமு​க​வி​னரை ஓரங்​கட்டி வந்த பொன்​முடி,​​ தான் தொகுதி மாறி​ய​போ​தும்,​​ முக்​கிய நிர்​வா​கி​கள் ஒரு​வ​ருக்​கும் வாய்ப்பு கொடுக்​கா​மல் ஏமாற்​றி​ய​தால்,​​ திமு​க​வி​னர் கடும் அதி​ருப்​தி​யில் உள்​ள​னர்.​ இத​னால்,​​ அமீர் அப்​பா​ஸுக்கு திமு​க​வின் முழு​மை​யான ஆத​ரவு கிடைக்​குமா என்​ப​தில் சந்​தே​கம் என்​கின்​ற​னர் உடன் பிறப்​பு​கள்.​ இது அவ​ருக்கு பல​வீ​ன​மாக அமைந்​துள்​ளது.​

தேமு​திக:​​ நாயுடு சமூ​கத்​தைச் சேர்ந்த தேமு​திக எம்​எல்ஏ வெங்​க​டே​சன் உள்​ளூ​ரைச் சேர்ந்​த​வர் என்​றா​லும்,​​ திருக்​கோ​வி​லூரை விட்டு இந்த முறை விழுப்​பு​ரத்​துக்கு வந்​துள்​ளார்.​ திருக்​கோ​வி​லூரை ஒரு​வ​ருக்​கும் விட்​டுக்​கொ​டுக்க மாட்​டேன் என்​றெல்​லாம் சப​தம் போட்ட இவர்,​​ முந்​தைய திமுக பிர​மு​கர் என்​ப​தால்,​​ பொன்​மு​டிக்​கும்,​​ இவ​ருக்​கும் ஏற்​பட்ட ரக​சிய உடன்​பாடு தான்,​​ இப்​போ​தைய பரஸ்​பர தொகுதி மாற்​றம் என்று பர​வ​லாக பேசப்​ப​டு​கி​றது.​

தேமு​திக,​​ மதி​முக,​​ கம்​யூ​னிஸ்ட்​க​ளின் பல​மில்​லாத நிலை​யில்,​​ விடு​த​லைச் சிறுத்​தை​க​ளின் வாக்​கை​யும்,​​ திமு​க​வி​ன​ரின் மறை​முக வாக்​கு​க​ளை​யும் நம்​பியே வெங்​க​டே​சன் களத்​தில் உள்​ளார்.​ பாஜக,​​ பகு​ஜன் சமாஜ்,​​ நாம் தமி​ழர் கட்​சி​கள் சொற்ப அள​வில் உள்ள கட்சி ஓட்​டு​களை நம்பி களத்​தில் உள்​ளன.​ விழுப்​பு​ரம் தொகு​தி​யில் நான்​கு​மு​னைப் போட்டி என்று கூறப்​பட்​டா​லும்,​​ அதி​முக-​பாமக இடையே தான் நேரடி போட்டி நிலவி வரு​கி​றது.​

- எல்.அன்பரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.