திமுக ஆட்சியில்தான் விழுப்புரம் வளர்ச்சி: திண்டுக்கல் ஐ.லியோனி

திமுக ஆட்சியில் தான் விழுப்புரத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் தான் விழுப்புரத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அமீர் அப்பாஸை ஆதரித்து, அவர் பேசியது: தமிழக மக்களுக்காக 93 வயதிலும் உழைக்கும் ஒரே தலைவர் கருணாநிதி தான். திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுகவினர் காப்பியடித்து வெளியிட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், நடைபெற்று வரும் கொலை, கொள்ளை விவரங்களை கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் போட்டியிடும் அதிமுக சி.வி.சண்முகம், தனது அமைச்சர் பதவியையே காப்பாற்றத் தெரியாதவர். எப்படி மக்கள் பணி செய்யப் போகிறார்?

திமுக ஆட்சியில் தான் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, விழுப்புரம் நகரம் கம்பீரமாக காட்சியளித்தது. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒரு திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை.

அதிமுகவினரின் செல்லிடப்பேசி எப்போதும் தொடர்பில் இருக்காது, திமுகவினரின் செல்லிடப்பேசிகள் தான் தொடர்பில் இருக்கும் என்றார். வேட்பாளர் அமீர் அப்பாஸ், திமுக மாவட்டப் பொருளர் புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com