விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் கோ.செங்குட்டுவனின் "அருங்காட்சியகம்- அவசியமும், அவசரமும்' என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
விழுப்புரம், கே.கே. சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னையைச் சேர்ந்த இல்லம் தோறும் நூலக இயக்கம், விழுப்புரம் முல்லை புத்தக அங்காடி ஆகியவை சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வரும்
15-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இதில் நாள்தோறும் தமிழ் அறிஞர்கள், நூலாசிரியர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், நூல் வெளியீடு போன்றவை நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் கோ.செங்குட்டுவனின் "அருங்காட்சியகம்- அவசியமும், அவசரமும்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழுப்புரம் பாரதி சிந்தனைப் புலம் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், அச்சகத்தார் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முல்லை புத்தக அங்காடி ஏழுமலை வரவேற்றார்.
நூலை புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நா.இளங்கோ வெளியிட புதுச்சேரி மாநில காவல் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் கோ.செங்குட்டுவன் ஏற்புரையாற்றினார். இல்லந்தோறும் நூலக இயக்க தலைவர் ந.ராசாராம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

