40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெரியார்,  எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைப்பிடிப்பு

விழுப்புரத்தில் தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினம், எம்.ஜி.ஆரின் 29-ஆவது நினைவு தினத்தில் திங்கள்கிழமை கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 10:01 am IST

விழுப்புரத்தில் தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினம், எம்.ஜி.ஆரின் 29-ஆவது நினைவு தினத்தில் திங்கள்கிழமை கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு,  திமுக மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தலைமையில் வந்த திமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாவட்டப் பொருளாளர் புகழேந்தி,  ஆர்.ஜனகராஜ்,  பஞ்சநாதன்,  முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ்,  நகரச் செயலர் சக்கரை உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.  
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.டி.
குலாம்மொய்தீன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முபாரக்அலி, ஆறுமுகம்,  மாவட்டப் பொதுச் செயலர்கள் சுந்தர்,  சீனுவாசன்,  செய்தித் தொடர்பாளர் அகமது, நகரப் பொதுச் செயலர்கள் சோமு,  கே.காஜா உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமையில் மாவட்டப் பொருளாளர் கலியமூர்த்தி,  நிர்வாகக் குழு உறுப்பினர் கலியபெருமாள்,  நகர செயலாளர் ஆனந்தராஜ், ராஜேஷ்,  அருண், கார்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  தேமுதிக சார்பில் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில்,  நிர்வாகிகள் ஆதவன்முத்து,  சூடாமணி,  மனோ உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். 
எம்.ஜி.ஆருக்கு மரியாதை: 
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-ஆவது நினைவு தினம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது. விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில்,  அண்ணா தொழிற்சங்கத்தினர் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பணிமனைச் செயலர்கள் முத்துராமன்,  ராமலிங்கம்,  ஏழுமலை, மணிமாறன், அருள்தாஸ், ரமேஷ் உள்ளிட்ட  தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மந்தக்கரைத் திடலில் அதிமுக முன்னாள் நகரச் செயலர் ஜானகிராமன் தலைமையில் அந்தக் கட்சியினர்  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  விழுப்புரம் அருகே பாணாம்பட்டில் 42-ஆவது வார்டு சார்பில், வார்டுச் செயலர் பாவாடை தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி: தந்தை பெரியாரின் 45ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளைஞர் அணி மாநிலச் செயலாளர் இல.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். டாக்டர் ஏ.கே.கண்ணதாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட துணைத் தலைவர் தங்க.ரகோத்தமன், என்.ஜி.ஓ மாவட்டத் தலைவர் இரா.தர்மராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் ஆலத்தூரில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத் தலைவர் கல்பானா அரிஹரன் தலைமை வகித்தார். உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
க.காமராஜ் எம்.பி., கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.ஏ. ராஜசேகர்,  ஆகியோர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு  மாலை அணிவித்து மலர்தூவி  மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜு, கிளைச் செயலாளர் ராமு, பேரவைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல, கள்ளக்குறிச்சியில் நகர அதிமுக அலுவலகத்தில் இருந்து நகரச் செயலாளர் எம்.பாபு, ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.ஏ. ராஜசேகர் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
நிகழ்ச்சியில் க.காமராஜ் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, முன்னாள் நகர் மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் ஒய்.அப்துல்கரீம், நகர துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி,  மாவட்ட வழக்குரைஞர் பிரிவு பொருளாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தியாகதுருகத்தில் ஒன்றியச் செயலாளர் வெ.அய்யப்பன் தலைமையில் அதிமுகவினர் பேரணியாக வந்து காந்தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.ஜான்பாஷா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ரமேஷ்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குமாரசாமி, குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உளுந்தூர்பேட்டை: திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவரது நினைவு நாளில் ஆலையின் தலைவர் ராமலிங்கம் அதிமுகவினருடன் சென்று திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காண்டீபன், ஒன்றிய இணைச் செயலாளர் சிவகாமி முருகதாஸ், நகரச் செயலாளர் கேசவன், முன்னாள் கவுன்சிலர் மாயவன், இயக்குநர் பலராமன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர்கள் மோகன், ஆறுமுகம், சந்திரசேகர், நகர தலைவர் வேலாயுதம், கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வமுருகன், பாபு, துணைத்தலைவர் தங்கராசு, ஏழுமலை, அண்ணா தொழிற்சங்க தலைவர் துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.