போலி அடையாள அட்டையை காண்பித்து மோசடி: 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சுங்கச்சாவடியில் எம்.பி.யின் அடையாள அட்டை என போலியான அட்டையைக் காண்பித்து செல்ல முயன்ற கார் உரிமையாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.


கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சுங்கச்சாவடியில் எம்.பி.யின் அடையாள அட்டை என போலியான அட்டையைக் காண்பித்து செல்ல முயன்ற கார் உரிமையாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள வீரசோழபுரத்தில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இவ்வழியாக ஞாயிற்றுக்கிழமை காரில் வந்த மூவர், கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினரின் அடையாள அட்டையை காண்பித்து, எம்.பி. காரின் உள்ளே உள்ளார் எனக் கூறியுள்ளனர். அப்போது, அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர் சந்தேகமடைந்து, சுங்கச்சாவடி மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மேலாளர் சத்தியநாராயணன் அடையாள அட்டையை பரிசோதித்த போது, அது போலி அடையாள அட்டை எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் தியாகதுருகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் பாலாஜி (39) (கார் உரிமையாளர்), சென்னை உள் அகரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் சாலமன் (31) (ஓட்டுநர்) எனத் தெரிய வந்தது.
மற்றோருவர் விழுப்புரம் மாவட்டம், சிறுவள்ளூரைச் சேர்ந்த பிச்சநாதபிள்ளை மகன் சுரேஷ் (39) என்பதும், அவர்தான் எம்.பி.யின் அடையாள அட்டையை கொடுத்தவர் எனவும் தெரிந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...