விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்துக் கட்டண உயர்வு சனிக்கிழமை பிற்பகல் முதல் அமலுக்கு வந்தததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு அறிவித்த விகிதங்களை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டண உயர்வை மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. சனிக்கிழமை முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவித்ததோடு, கட்டண உயர்வையும் வெளியிட்டது. இந்தக் கட்டண உயர்வு விழுப்புரம் மாவட்டத்திலும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
சராசரியாக 25 சதவீதம் கூடுதல் கட்டணத்தால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை உள்ளிட்ட நெடுந்தொலைவு பேருந்துகளில் கட்டண உயர்வு, அரசு அறிவித்த விகிதங்களைக் காட்டிலும் 40 சதவீதம் வரை அதிகமாக இருந்ததாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
குறைந்த பட்சம் ரூ.7: புறநகர் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.7 ஆகவும், நெடுந்தொலைவு பேருந்துகளுக்கு ரூ.7 லிருந்து ரூ.10 ஆகவும், சொகுசுப் பேருந்துகளுக்கு ரூ.10 லிருந்து ரூ.15 ஆகவும், நகரப் பேருந்துகளுக்கு ரூ.3 லிருந்து ரூ.5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்-சென்னை மார்க்கம்: புதிய கட்டணம் (பழைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்)
விழுப்புரம்-திண்டிவனம் ரூ.40 (ரூ.23), மேல்மருவத்தூர் ரூ.70 (ரூ.40), செங்கல்பட்டு ரூ.111 (ரூ.61), பெருங்களத்தூர் ரூ.131 (ரூ.85), சென்னை ரூ.145 (ரூ.93), விரைவுப் பேருந்துகளில் ரூ.155.
விழுப்புரம்-புதுச்சேரி மார்க்கம்: விழுப்புரம்-கோலியனூர் ரூ.7 (ரூ.5), வளவனூர் ரூ.7, (ரூ.6), மதகடிப்பட்டு ரூ.11 (ரூ.8), திருபுவனை ரூ.12 (ரூ.9), கண்டமங்கலம் ரூ.15(ரூ.10), வில்லியனூர் ரூ.20 (ரூ.14), புதுச்சேரி ரூ.22 (ரூ.20).
விழுப்புரம்-திருக்கோவிலூர்: விழுப்புரம்-காணை ரூ.7 (ரூ.5), ஆயந்தூர் ரூ.12 (ரூ.9), முகையூர் ரூ.18 (ரூ.15), திருக்கோவிலூர் ரூ.25 (ரூ.17)
விழுப்புரம்-திருவண்ணாமலை: விழுப்புரம்-கெடார் ரூ.10 (ரூ.8), கண்டாச்சிபுரம் ரூ.18 (ரூ.12), வேட்டவலம் ரூ.25 (ரூ.17), திருவண்ணாமலை ரூ.47 (ரூ.21), விரைவுப் பேருந்து ரூ.55.
விழுப்புரம்-கள்ளக்குறிச்சி: விழுப்புரம்-மடப்பட்டு ரூ.12 (ரூ.10), கெடிலம் ரூ.15 (ரூ.13), உளுந்தூர்பேட்டை ரூ.26 (ரூ.23) , எலவசனூர் கோட்டை ரூ.35 (ரூ.30), தியாக துருகம் ரூ.41 (ரூ.37), கள்ளக்குறிச்சி ரூ.50 (ரூ.44). விரைவுப் பேருந்து ரூ.55.
விழுப்புரம்-திருச்சி: விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை ரூ.26 (ரூ.23), பெரம்பலூர் ரூ.95(ரூ.60), சமயபுரம் ரூ.85 (ரூ.130), திருச்சி ரூ.145 (ரூ.95), விரைவுப் பேருந்து ரூ.155
விழுப்புரம்-கடலூர்: விழுப்புரம்-கோலியனூர் ரூ.7 (ரூ.5), வாணியம்பாளையம் ரூ.10 (7), கண்டரக்கோட்டைரூ.15 (ரூ.10), மாளிகைமேடு ரூ.16 (ரூ.11), பட்டாம்பாக்கம் ரூ.20 (ரூ.13), நெல்லிக்குப்பம் ரூ.22 (ரூ.15), கடலூர் ரூ.32 (ரூ.25).
விழுப்புரம்-சேலம்: விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ரூ.50(ரூ.44), தலைவாசல் ரூ.110(ரூ.60), ஆத்தூர் ரூ.115(ரூ.70), சேலம் (ரூ.103) ரூ.161, எக்ஸ்பிரஸ் ரூ.170
விழுப்புரம்-வேலூர்: விழுப்புரம்-பூத்தமேடு (ரூ.7) ரூ.10, கஞ்சனூர் (ரூ.10) ரூ.15, செஞ்சி ரூ.33(ரூ.22), சேத்பட் ரூ.57 (ரூ.44), ஆரணி ரூ.92 (ரூ.55), வேலூர் ரூ.115 (ரூ.90).
விழுப்புரம்-பெங்களூரு ரூ.240 (ரூ.190)
விழுப்புரம்-திருப்பதி ரூ.260 (ரூ.190)
25 சதவீதம் உயர்வு: விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, சேலம், சென்னை ஆகிய மார்க்கங்களில், பேருந்துகளில் புதிய கட்டணம் நண்பகல் 12 மணிக்குப் பிறகு அமலுக்கு வந்தது. போக்குவரத்துக் கழக அலுவலகத்திலிருந்து வந்த புதிய பட்டியலை வைத்து நடத்துநர்கள் கட்டணம் வசூலித்தனர். தனியார் நடத்துநர்களும் இந்த கட்டண ரசீதைப் பெற்று புதிய கட்டணத்தை வசூலித்தனர்.
புதிய கட்டணம் ரூ.25 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து பயணித்தனர்.
சென்னை உள்ளிட்ட நெடுந்தொலைவு பேருந்துகளில் அரசு அறிவித்த விகிதங்களை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டதால், பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். போக்குவரத்துக் கழகம் வழங்கிய கட்டணத்தையே வசூலிப்பதாக தெரிவித்து நடத்துநர்கள் விளக்கமளித்தனர்.
பிற மாநிலங்களில்..
புதுவை, கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளில், தமிழக பகுதி கி.மீ. தொலைவுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது. வெளி மாநிலங்களுக்கு பழைய கட்டணத்தையே வசூலித்தனர். எனினும், 25 சதவீதம் கட்டண உயர்வு இருந்ததால் அதிருப்தி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.