விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மூத்த குடிமக்கள் சங்கம்

டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நிலவேம்புக் குடிநீர் வழங்குவது போன்றவை மேற்கொள்ளப்படும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On :5 நவம்பர் 2018, 9:20 am IST

டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நிலவேம்புக் குடிநீர் வழங்குவது போன்றவை மேற்கொள்ளப்படும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் கூட்டமைப்பின் மாவட்ட கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குக சரவணபவன் முன்னிலை வகித்தார்.
 மாவட்ட பொருளாளர் சுருளிமலை, திண்டிவனம் வட்டத் தலைவர் ராமதாஸ், காணை வட்டத் தலைவர் கண்ணன், கோலியனூர் வட்டத் தலைவர் ராஜாராம், செஞ்சி வட்ட துணைத் தலைவர் பாபு, நிர்வாகிகள் சுப்பிரமணியன், தண்டபாணி, ஆறுமுகம், கோவிந்தராசு உள்ளிட்டோர் பேசினர்.
 கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
 சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், மாநிலத் தலைவர் சாமிநாதன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுதல், உறுப்பினர்களுக்கு குறிப்பேடு, நாள்காட்டி வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.