சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தைக் கெடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் பியாரிலால், குப்புசாமி, கோட்ட பொறுப்பாளர்கள் சுகுமார், சிவசுப்பிரமணியன், இணைப் பொறுப்பாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுச்
செயலர்கள் சுகுமார், அன்பழகன், மாவட்ட நிர்வாகிகள் ராகினி, சக்திவேல், ரகு, பாலசுப்பிரமணியன், சரண்யா, ஒன்றிய நிர்வாகிகள் பழனி ரவிச்சந்திரன், முருகன் சுந்தரராஜன், கார்த்திகேயன், சௌந்தர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை இழிவுபடுத்தி, சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பெண்களை அனுமதித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும், இந்து மத வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வரும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஐயப்பன் கோயில் வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவதை கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
பாஜக, ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.