நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 01st April 2019 10:01 AM | Last Updated : 01st April 2019 10:01 AM | அ+அ அ- |

பங்காரம் ஸ்ரீலஷ்மி கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற நெகிழி ஓழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சிங்காரப்பேட்டை, சித்தேரிப்பட்டு, பழையசிறுவங்கூர், பள்ளிப்பட்டு, சூளாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கல்வி இயக்குநர் நாராயணசாமி, கல்லூரி துணை முதல்வர் சேதுமுருகன் ஆகியோர் நெகழி ஒழிப்பு குறித்து கிராம மக்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்தினர்.
சூளாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற பேரணியை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அருள், ராஜாஜி ஆகியோர் தொடக்கிவைத்தனர். இதில், குருநாதன், சதீஷ், ரஞ்சித் உள்ளிட்ட ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது.
இதையடுத்து, அந்தக் கிராமத்திலுள்ள ஐய்யனார், செல்லியப்பன் கோயில்களின் வளாகங்களை நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப்படுத்தினர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும், உதவிப் பேராசிரியருமான கோவிந்தன் நன்றி கூறினார்.