கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
By DIN | Published On : 11th April 2019 08:34 AM | Last Updated : 11th April 2019 08:34 AM | அ+அ அ- |

சங்கராபுரம் அருகே விரியூர் இமாகுலேட் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில், கணினி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அ.பாத்திமா தலைமை வகித்தார். சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தே.சிவச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
சங்கராபுரம் ஜே.பி. கணினி மையத் தலைமை பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். விழாவில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, கணினி பயிற்சி முடித்த கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அருட்சகோதரிகள் சந்தானமேரி, ஜான்சிராணி, லில்லிமேரி, பேராசிரியர்கள் ஸ்ரீபன், தாமஸ், கெவின், சவரிராஜ் ஆகியோர் மாணவிகளைப் பாராட்டிப் பேசினர். கணினி பயிற்சி மையத்தைச் சேர்ந்த தமிழ்மணி, சதீஷ்குமார், தமிழ், சிலம்பரசன், கலைச்செல்வி, செல்வமணி, பன்னீர்செல்வம், அனிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.