செஞ்சியில் மாதிரி வாக்குப் பதிவு
By DIN | Published On : 12th April 2019 08:11 AM | Last Updated : 12th April 2019 08:11 AM | அ+அ அ- |

செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை கண்டறிய மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவை ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர்கள் முகம்மது சாதிக் ஆலம், ராகுல் கட்டாக்கே ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார், செஞ்சி வட்டாட்சியர் ஆதிபகவன், மேல்மலையனூர் வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர்கள் ராதாகிருஷ்ணன், செல்வமூர்த்தி, பழனி, வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.