வாக்களிக்க வருவோரை தடுத்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு மையம் அருகே கூட்டம் கூடினாலோ, வாக்களிக்க வருவோரை தடுத்தாலோ

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு மையம் அருகே கூட்டம் கூடினாலோ, வாக்களிக்க வருவோரை தடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குப் பதிவு மையங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 
இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 13 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 50 காவல் ஆய்வாளர்கள், 300 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 3ஆயிரம் காவலர்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்ட உள்ளூர், பிற மாவட்ட காவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். 
குறிப்பாக, 8 துணை ராணுவப் படையைச் சேர்ந்த 640 துணை ராணுவத்தினர் 160 பதற்றம் நிறைந்த வாக்கு மையங்கள் மற்றும் பல இடங்களில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி, நேர்மையான முறையில் வாக்குகளை பதிவு செய்யலாம்.
 வாக்குப் பதிவு நாளன்று, வாக்குப் பதிவு மையங்களின் அருகில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். அதனை மீறி கூட்டம் கூடினாலோ அல்லது வாக்களிக்க வருவோரை தடுத்தாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
   தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் கொடுப்பது சட்டப்படி குற்றம். இதனை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com