கண்கள் தானம்
By DIN | Published On : 26th April 2019 07:33 AM | Last Updated : 26th April 2019 07:33 AM | அ+அ அ- |

திண்டிவனத்தில் இயற்கை மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
திண்டிவனம் மீனாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோபி. இவரது தாய் பத்மாவதி (80), உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் மூலம் பத்மாவதியின் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, சர்வீஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் குமார், சர்வீஸ் லயன்ஸ் டிரஸ்ட் தலைவர் ஸ்மைல்ஆனந்த், நிர்வாகிகள் ஆனந்த், ராஜ்குமார், கஸ்தூரி ரங்கன், சதீஷ் மற்றும் கோபியின் உறவினர்கள் உடனிருந்தனர்.