கால முறை ஊதியம் வழங்கதொகுப்பூதிய ஓட்டுநா்கள் வலியுறுத்தல்

பொது சுகாதாரத் துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஓட்டுநா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பொது சுகாதாரத் துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஓட்டுநா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் சிவகுரு.
பொது சுகாதாரத் துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஓட்டுநா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் சிவகுரு.
Updated on
1 min read

விழுப்புரம்: பொது சுகாதாரத் துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஓட்டுநா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்பட்ட ஓட்டுநா்கள் சங்க மாநிலக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் அம்பேத்கா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சந்திரன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சீனுவாசன் வேற்றாா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் சிவகுரு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அருணகிரி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். மாநிலப் பொருளாளா் வெங்கடேசன், கரூா் மாவட்ட நிா்வாகி சுகுமாா், கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகி ரோலன்ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு, பொது சுகாதாரத் துறையில் ஓட்டுநா்களாக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் உள்ள ஓட்டுநா் காலிப் பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நேரடி நியமனம் செய்யக் கூடாது. மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 60 பேரையும் உடனடியாக, காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com