கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
By DIN | Published On : 04th January 2019 09:34 AM | Last Updated : 04th January 2019 09:34 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறையும், கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து பயிற்சி அளித்தன. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார்.
கால்நடை மருத்துவர் ஆலமரத்தான் பேசுகையில், கறவை மாட்டுக்குத் தேவையான சரிவிகித அளவில் அடர் தீவனம், உலர் தீவனம் அளித்து வந்தால் அதிகளவு வருமானம் பெறலாம். மாட்டுக் கொட்டகையைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கோமாரி மற்றும் மடி நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
பயிற்சியின் போது, 40 விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவையான தீவன சோளம், தட்டைப் பயிறு விதைகள் வழங்கப்பட்டன. துணை வேளாண்மை அலுவலர் சாந்தலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெயப்பிரதா, மைக்கேல், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி, மணிவேல், பயிர் அறுவடை
பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.
குறைதீர்க்க கூட்டுமன்றக் கூட்டம்
அரசு அலுவலர்கள் வலியுறுத்தல்விழுப்புரம், ஜன. 3: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டு மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளான மாவட்டத் தலைவர் சு.நாகராஜன், செயலாளர் கௌ.முகமதுகாஜா, பொருளாளர் சா.அறிவழகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை புத்தாண்டு தினத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு அலுவலர்களுக்கான கோரிக்கைகளை தீர்க்கும் கூட்டு மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, அரசு அலுவலர்கள், ஊழியர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய பிற மாவட்டங்களில் நடப்பதைப் போல, விழுப்புரம் மாவட்டத்திலும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...