நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th January 2019 09:34 AM | Last Updated : 04th January 2019 09:34 AM | அ+அ அ- |

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் அ.ஆனந்தன் தலைமை வகித்தார். அனந்தபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனி பேரணியை தொடக்கிவைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் க.ஏழுமலை நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு குறித்துப் பேசினார்.
மாணவர்கள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி அனந்தபுரம் பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பேருந்து நிலையத்தை அடைந்து, மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். ஆசிரியர்கள் அர.சண்முகம், ஆ.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...