மாணவிகளுக்கு சீருடை
By DIN | Published On : 04th January 2019 09:36 AM | Last Updated : 04th January 2019 09:36 AM | அ+அ அ- |

சங்கராபுரம் அருகே பாச்சேரியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பள்ளியை ஏற்று நடத்தும் ஆமினா கல்வி அறக்கட்டளை கூடுதல் செயலர் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கார்குழலி வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் சி.வெங்கடேஷ், மாணவிகளுக்கு நிகழாண்டுக்கான சீருடைகள், போர்வைகள், துண்டுகள், பாய், தலையணை உள்ளிட்ட பொருள்கள் வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆசிரியைகள் சலேத்மேரி, புஷ்பா, தனமேரி, ஜெயலட்சுமி, சசிரேகா, சமீம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மா.வினோதினி நன்றி கூறினார்.