தலைமைக் காவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு
By DIN | Published On : 04th January 2019 09:35 AM | Last Updated : 04th January 2019 09:35 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் தலைமைக் காவலர்கள் 4 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
பிரம்மதேசம் தனிப் பிரிவு தலைமைக் காவலர் முருகானந்தம், நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலர் அய்யாசாமி, கச்சிராயபாளையம் தனிப் பிரிவு தலைமைக் காவலர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...