போட்டித் தேர்வு குறித்த கருத்தரங்கம்
By DIN | Published On : 04th January 2019 09:38 AM | Last Updated : 04th January 2019 09:38 AM | அ+அ அ- |

இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி அறிவுத் திருக்கோவில் மன வளக்கலை மன்ற நிர்வாகி எஸ்.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செ.வ.புகழேந்தி, ஆர்.கே.எஸ். பள்ளியின் ஆலோசகர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் பி.ஜான்விக்டர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர்
இரா.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்றுநர் வி.பாலசங்கர், மன வளக்கலை மன்ற வேல்முருகன்,
கல்லூரியின் துறைத் தலைவர் டி.அசோக் உள்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...