இசைத் தொகுப்பு வெளியீடு
By DIN | Published On : 03rd July 2019 08:52 AM | Last Updated : 03rd July 2019 08:52 AM | அ+அ அ- |

விழுப்புரம் இ.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் சர்வ சாயி அருளமுதம் என்கிற இசைத் தொகுப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் சா.செல்வமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அகோரம் வரவேற்றார். கல்விக் குழுமத் தலைவர் இ.சாமிக்கண்ணு, ஸ்ரீரங்கம் சக்தி ராஜலட்சுமி ராஜகோபாலன் பாடிய இசை ஒலித்தகட்டை வெளியிட, சத்ய சாய் சேவை மைய மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் பெற்றுக்கொண்டார்
(படம்). சக்தி ராஜலட்சுமி மற்றும் சத்ய சாய் சேவை மைய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...