செஞ்சி கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராம பஜனை
By DIN | Published On : 09th June 2019 03:09 AM | Last Updated : 09th June 2019 03:09 AM | அ+அ அ- |

செஞ்சி சங்கராபரணி நதிக்கரையின் மேல் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஸ்ரீநரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், ஸ்ரீராம பஜனையும் சனிக்கிழமை நடைபெற்றன.
எம்.ராமமூர்த்தி, திருமால் வணக்கத்துடன் பஜனையைத் தொடக்கிவைத்தார். ஸ்ரீகோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஞானல்மேடு வி.ஜெயராமதேசிகர் தலைமை வகித்தார். கொங்கரப்பட்டு ஜனார்த்தன தேசிகர் தலைமையுரையாற்றினார்.
எட்டியாப்பிள்ளை, சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். நடுப்பட்டு சன்மார்க்க வில்லுப்பாட்டுக் கலைஞர் ப.புருஷோத்தமன் தலைமையில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பஜனைக் குழுவினர் கலந்துகொண்டு பஜனை பாடினர்.
செஞ்சி பி.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் திருமஞ்சன பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினர். விழாவில், ஷகிலா ஆண்டாள், ஸ்ரீராமுலு, நிலவளம் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஸ்ரீராம ஆஞ்சநேயா பக்த ஜன சபா மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.