விருது வழங்கும் விழா
By DIN | Published On : 09th June 2019 03:09 AM | Last Updated : 09th June 2019 03:09 AM | அ+அ அ- |

தியாகதுருகம் ஒளவையார் தமிழ்ச் சங்கம் சார்பில் பாவரங்கம், விருது வழங்கும் விழா கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் கல்யாணி நடராஜன் தலைமை வகித்தார். விழுப்புரம் பாவேந்தர் பேரவை செயலர் உலகத்துரை, மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத், கே.சுமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். அருணா குமாரி வரவேற்றார்.
நகைக்கடை மேலாளர் சுமேஷ், அரங்க வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ கோமுகி மணியன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பேசினர். விழுப்புரம் தியாகி அறக்கட்டளை தலைவர் கோ.விஜயகுமார், ஒளவையார் விருதை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் இரா.வண்ணமுகிலுக்கு வழங்கிப் பேசினார். பாவலர் மலரடியான் தலைமையில், இலக்கிய வானில் இனியவை' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் வீ.கோவிந்தராஜன், கவிதைத்தம்பி, கி.ச.தமிழரசி, வளர்மதி செல்வி, மு.பன்னீர்செல்வம், கோ.பாரதி, ஜெ.அருள்ராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். கோ.ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.