ஆன்மிகச் சொற்பொழிவு
By DIN | Published On : 06th March 2019 08:37 AM | Last Updated : 06th March 2019 08:37 AM | அ+அ அ- |

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, திருக்கோவிலூர் அருகே மேமாளூர் கங்காதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
கங்காதீஸ்வரர் கோயில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிறுவனர் கு.புகழேந்தி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மெய்ப்பொருள் நாயனாரின் சிவ பக்தி என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத் தலைவர் புலவர் குப்பன், திருநீற்றின் சிறப்பு என்ற தலைப்பில் திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன், நரசிங்க முனையரின் பக்தி நெறி என்ற தலைப்பில் கவிஞர் பாரதிமணாளன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றினர். தொடர்ந்து, சங்கராபுரம் அருவி குழுவினரின் ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் விடிய, விடிய கண் விழித்து தொடர் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.