விழுப்புரம் மகாராஜபுரத்தில் அமைந்துள்ள மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் 38-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா திங்கள் கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை நான்கு கால பூஜையுடன் நடைபெற்றது.
பகல் 12.30 மணிக்கு அன்னதானத்துடன் விழா தொடங்கியது. மாலை 5 மணிக்கு முத்தால்வாழி மாரியம்மன் கோயிலிலிருந்து சுவாமிக்கு அபிஷேகப் பொருள்கள் ஊர்வலமாக வந்தது. இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. மீனாட்சி அம்மன் சமேதராய் சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இரவு 10 மணிக்கு சங்கு அபிஷேகங்களுடன் இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 12 மணிக்கு அன்ன அபிஷேகத்துடன், மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது.
சுந்தரேஸ்வரர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா சிவராத்திரி விழாவில், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து பூஜையில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.