மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 06th March 2019 08:46 AM | Last Updated : 06th March 2019 08:46 AM | அ+அ அ- |

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் டெல்லி அப்பாதுரை முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். இதில், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்னர். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு கடந்த 1.10.2017-இல் அரசு ஊதிய மாற்றம் செய்து ஊதிய உயர்வு அளித்து ஆணையிட்டுள்ளது. இருப்பினும் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆகவே, உடனே ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், மூன்றாண்டு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கும் உத்தரவு ஆணையை செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.