கல்லூரியில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 22nd March 2019 09:22 AM | Last Updated : 22nd March 2019 09:22 AM | அ+அ அ- |

திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது.
திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வர் அ.ம.சத்தியமூர்த்தி தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். அரிமா சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செ.சிவா வரவேற்றார்.
திண்டிவனம் அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் சந்தோஷ்குமார், தமிழ்பிரியா தலைமையில், ஒலக்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் ரத்தம் பெற்றனர்.
முகாமில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ந.சத்தியா, பெற்றோர் -ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் கோ.தண்டபாணி, அரிமா சங்கச் செயலர் பாபு, பொருளாளர் ரவிசந்திரன், மாவட்டத் தலைவர் தமிழ்அமுதன், மாவட்ட ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், ஹோட்டல் ஆரியாஸ் கார்டன் இணைந்து ரத்த தான முகாமை அண்மையில் நடத்தியது. திண்டிவனம் சர்வீஸ் சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் சேர்மன் ஸ்மைல் ஆனந்த், செயலர் முத்துராஜ்குமார், பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரியாஸ் உரிமையாளர் ராமகிருஷ்ணன் முகாமைத் தொடக்கிவைத்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் 87 யூனிட் ரத்தத்தைக் கொடையாளர்களிடம் இருந்து தானமாகப் பெற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...