கோஷ்டி மோதல்: 4 பேர் கைது
By DIN | Published On : 22nd March 2019 09:21 AM | Last Updated : 22nd March 2019 09:21 AM | அ+அ அ- |

மூங்கில்துறைப்பட்டு அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கும் இடையே கட்சிக் கொடிக் கம்பம் நடுவதில் முன்விரோதம் இருந்து வந்ததாம் .
கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, புதன்கிழமை பாலு, அவரது மனைவி விஜயா ஆகியோரை ராஜேந்திரனின் தம்பிகள் தேவேந்திரன், ரவி, செல்வம், தேவேந்திரன் மனைவி குமாரி ஆகியோர் சேர்ந்து தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த பாலு, விஜயா ஆகியோர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரன் தரப்பைச் சேர்ந்த தேவேந்திரன் (46), குமாரி (36), பாலு தரப்பைச் சேர்ந்த பாலச்சந்தர் (27), சரவணன் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தக் கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...