பேருந்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது
By DIN | Published On : 22nd March 2019 09:27 AM | Last Updated : 22nd March 2019 09:27 AM | அ+அ அ- |

பேருந்தில் பயணியிடம் பணம் திருடியதாக 3 பெண்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சுதா (45). இவர், விழுப்புரத்தில் உள்ள அரசு அடகுக் கடையில் அடகு வைத்த தனது நகைகளை மீட்பதற்காக வீட்டிலிருந்து ரூ.59
ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை புறப்பட்டார். விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, சக பயணிபோல உடன் வந்த 3 பெண்கள் சுதா வைத்திருந்த பணப் பையை திருட முயன்றனர். இதை கவனித்த சுதா உடனடியாகக் கூச்சலிட்டார். அப்போது, பேருந்திலிருந்து அந்த 3 பெண்களும் தப்பியோட முயன்றனர். ஆனால், மற்ற பயணிகள் 3 பேரையும் மடக்கிப் பிடித்து, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த 3 பெண்களும் தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் மனைவி ரேகா (30), ஜீவா மனைவி பிரியா (32), முருகன் மனைவி ராதா (32) எனத் தெரியவந்ததது. சம்பவம் குறித்து சுதா அளித்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...