மக்களவைத் தேர்தலுக்காக விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் புதன்கிழமை தங்கள் பணியைத் தொடக்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, மனுக்கள் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றது. இந்த தொகுதிகளை கண்காணிப்பதற்கு தேர்தல் பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதன்படி விழுப்புரம் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர் மொகிந்தர்பால் புதன்கிழமை விழுப்புரம் வருகை தந்தார். இவர், வேட்பு மனுக்கள் பரிசீலனையை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் இல.சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதே போல், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு நியமித்துள்ள, தேர்தல் பார்வையாளர் தாஷிதந்தீப்ஷர்பா கள்ளக்குறிச்சி தேர்தல் அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.