கூத்தனூரில் தீ விபத்து: குடிசை சேதம்
By DIN | Published On : 30th March 2019 08:59 AM | Last Updated : 30th March 2019 08:59 AM | அ+அ அ- |

உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூர் காலனியில் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகை உள்பட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன.
கூத்தனூர் காலனி பகுதியில் வசிப்பவர் துரைசாமி மகன் அண்ணாதுரை. இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக, வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதில் வீடுமுழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில், கான்கிரீட் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணம் ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பணம், 3 பவுன் தங்க நகை மற்றும் வீட்டு உபயோகச் சாமான்கள் என மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின. இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...