தமிழ்ச்சங்க இலக்கியச் சொற்பொழிவு
By DIN | Published On : 30th March 2019 08:50 AM | Last Updated : 30th March 2019 08:50 AM | அ+அ அ- |

சங்கராபுரத்தில், சங்கைத் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் மு.கலைச்செழியன் தலைமை வகித்தார். வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன், நல்லாசிரியர் மு.முகமதுஉசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா வரவேற்றார்.
ஆசிரியர் சவரியம்மாள் குறள் விளக்கம் அளித்தார். பெண்மையைப் போற்றுவோம் என்ற தலைப்பில் புதுச்சேரி பாவலர் சு.சண்முகசுந்தரமும், சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் வா.மு.செ.ஆண்டவரும் பேசினர்.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற கள்ளக்குறிச்சி செ.வ.மதிவாணன், பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மூத்த செய்தியாளர் விருதுபெற்ற சங்கராபுரம் ஜெ.சூரியநாராயணன், பொதிகை தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார் விருதுபெற்ற சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நெடுமானூர் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.கதிர்வேல், மூவேந்தர் முன்னேற்றக் கழக முன்னாள் தலைவர் தி.ம.சுப்பிரமணியன், நல்லாசிரியர் சி.லட்சுமி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். நகர திராவிடர் கழகத் தலைவர் இல.சேரன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...