விழுப்புரம் (தனி) தொகுதியில் 13 பேர் போட்டி
By DIN | Published On : 30th March 2019 08:58 AM | Last Updated : 30th March 2019 08:58 AM | அ+அ அ- |

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பாமக, விசிக, அமமுக, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 30 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு பரிசீலனையில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டது.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியன் தலைமையில் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
வேட்பாளர்கள் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்
1. எஸ். வடிவேல் ராவணன் (பாமக)- மாம்பழம்
2. துரை.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) -உதயசூரியன்
3. என்.கணபதி (அமமுக) - பரிசுப் பெட்டி
4. அன்பின் பொய்யாமொழி (மநீம) - (டார்ச் லைட்)
5. கோ.கலியமூர்த்தி (பகுஜன் சமாஜ்)- யானை
6. டி.பிரகலதா (நாம் தமிழர் கட்சி) - கரும்பு விவசாயி
7. பெ.அபிராமி (தமிழ்நாடு இளைஞர் கட்சி) - மோதிரம்
8. செ.ராஜா (அகில இந்திய மக்கள் கழகம்) - வாளி
9. கே.அரசன் (சுயேச்சை) - பலாப்பழம்
10. தி.அன்பழகன் (சுயேச்சை)- அன்னாசி பழம்
11. எம்.கதிர்வேல் (சுயேச்சை) - கிரிக்கெட் மட்டை
12. அ.தேசிங்கு (சுயேச்சை) - திராட்சை
13. எம்.ராஜசேகரன் (சுயேச்சை)- கால்பந்து

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...