மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டை வள்ளலார் தெய்வஞான சபையில், வள்ளலார் கொள்கை நெறிபரப்பும் இயக்கம் சார்பில் ஆலம்பூண்டி ரவிச்சந்திரன் குழுவினரால் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
ஆசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, சிவநேசன், வேலவன், மருத்துவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயராமன் தலைமையில் சிறுவர் சிறுமிகளுடன் இணைந்து திருஅருட்பா பாடல்கள் கதைகளுடன் கூறி எடுத்துரைக்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் ஜோதி வழிபாடு நடைபெற்றது. அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. ஏற்பாடுகளை அவலூர்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க நிர்வாகிகள் சிவா,
நெப்போலியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.