விழுப்புரத்தில் கஞ்சா விற்ற நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் கே.கே. சாலைப் பகுதியில் விழுப்புரம் நகர உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீஸார் சனிக்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆட்டோ நிறுத்த சந்திப்பில் ஒருவர் கைப்பையுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்ததைப் பார்த்து விசாரித்தனர்.
இதில், அந்த நபர் பையில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (25) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. இதையடுத்து, விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.