திருவேங்கடமுடையான் கோயிலில் கருடசேவை
By DIN | Published On : 19th May 2019 09:54 AM | Last Updated : 19th May 2019 09:54 AM | அ+அ அ- |

செஞ்சி அருகேயுள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிருவேங்கடமுடையான் கோயிலில் வைணவ மகா சபை சார்பில் 13-ஆம் ஆண்டு கருட சேவை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி,பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8 மணி அளவில்
ஸ்ரீதிருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் சேகர், ரவி, அறிவழகன், கதிரவன், நெடுஞ்செழியன், பச்சையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.