தேர்வில் தோல்வியடைந்த மாணவர் மாயம்
By DIN | Published On : 19th May 2019 09:51 AM | Last Updated : 19th May 2019 09:51 AM | அ+அ அ- |

பிளஸ்1 தேர்வில் தோல்வியடைந்த மாணவர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குன்னியூர் மாரியம்மன் கோயில் சாலையில் வசித்து வருபவர்கள் கலியன் - புவனேஸ்வரி தம்பதி. இவர்களது மகன் கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தார். இவர் இறுதித் தேர்வில் 4 பாடங்களில் தோல்வியடைந்தார். இந்த நிலையில், சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்குச் செல்வதாக கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்விறகு மாணவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவரை தேடி வருகின்றனர்.