விழுப்புரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th May 2019 09:54 AM | Last Updated : 19th May 2019 09:54 AM | அ+அ அ- |

விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை கோயில் வளாகத்தில் கொடியேற்றம், வைகுண்டவாசப் பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, தினந்தோறும் உத்ஸவங்களும், கடந்த வியாழக்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை திருத்தேர் மகோத்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை
8 மணிக்கு காமராஜர் வீதி தலைமை தபால் நிலையம் முன் திருத்தேர் வீதியுலா புறப்பட்டது. காமராஜர் வீதி, மேல வீதி, வடக்கு வீதி, திருவிக வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலம் நடை
பெற்றது.
தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டவாசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
மாலையில் திருமஞ்சனமும், தீர்த்தவாரியும் நடைபெற்றன. வரும் 25-ஆம் தேதி வரை பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.