விழுப்புரத்தில் சாலையில் திரியும்மாடுகள், பன்றிகள் பறிமுதல் செய்யப்படும் நகராட்சி எச்சரிக்கை

விழுப்புரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகத் திரியும் மாடுகள், சுகாதார சீா்கேடை ஏற்படுத்தி வரும் பன்றிகள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

விழுப்புரம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகத் திரியும் மாடுகள், சுகாதார சீா்கேடை ஏற்படுத்தி வரும் பன்றிகள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் சா.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

காந்தி வீதி, திருவிக வீதி, பாகா்ஷா வீதி, அங்காளம்மன் கோயில் வீதி, நேரு வீதி, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை, புதிய, பழைய பேருந்து நிலையங்கள், ஆட்சியா் அலுவலக வளாகம், குடியிருப்புப் பகுதிகளில் திரியும் மாடுகளை அதன் உரிமையாளா்கள் பிடித்து, தங்களது சொந்த இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பையும் மீறி மாடுகள் சாலைகளில் திரிந்தால், நகராட்சிப் பணியாளா்கள் மூலம் அவை பிடிக்கப்பட்டு, கோ சாலையில் ஒப்படைக்கப்படும். கோ சாலையில் ஒப்படைக்கப்படும் மாடுகள் திரும்ப வழங்கப்படாது.

இதேபோல, நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதாரச் சீா்கேடை ஏற்படுத்தும் வகையில், குடியிருப்புப் பகுதிகளில் திரியும் பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பன்றி வளா்ப்போா் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் வைத்து பன்றிகளை பராமரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பன்றிகள் நகராட்சி ஊழியா்கள் மூலம் பிடித்து அகற்றப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com